20 June 2016

யாசிக்கும்-- ஏ-தி-லி -13

முன்னர் கதை இங்கே-http://www.thanimaram.org/2016/06/12.html

காதல் என்ற உணர்வு ஒருவனுக்கோ ,யுவதிக்கோ ,உள்ளத்தில் காதல்வேதம் என பூப்பது  எப்போது ?

வைரமுத்துவின் காதலித்துப்பார் கவிதை போலவா ,இல்லை தபூ சங்கரின் இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் எனக்கும் காதல் பிறந்திருச்சு என்ற கவிதை போலவா ?

நேசம் வரும் பருவம் என்ன ?இளமைக்காலங்களா?ஆராட்சிகள் பலதில் இளமை ஊஞ்சல் ஆடுகின்றது  ,காதலுக்கு மரியாததை  ,முதல் வசந்தம் பள்ளிப்பருவத்தில் என்பதா !

கன்னிப்பருவத்திலே என்பதா. இல்லை பூந்தளிர் போல மாப்பிள்ளை களைகட்டும் இல்லையேல் காதல்   முத்தினகத்தரிக்காய் போல !

இருபது வயதுவரை பெற்றோரின் வசமிருந்தேன்!இருபது நிமிடத்திலே உன் வசமாகிவிட்டேன்   காதல்கொண்டேன்  நீ பாதி நான் பாதி ,கண்ணால் பேசவா ,

இல்லை இன்னும் அடிப்படை இனப்பிரச்சனைக்கு முக்கியகாரணம் இனவாதசெயல் போக்கு என்பதை அறியாத இலங்கை ஜானாதிபதி போல காதலும் இன ஈர்ப்பு என்பதா ??

ஏன் இந்த மாற்றம் டுயட் பட கவிதை போல் கண்ணிருந்தால் வாசித்துப்போடி என்பது போல இல்லை யாழினி   என் காதல் .

உன்னைப்பார்த்த அந்த கார்கால கார்த்திகை தீபஜோதி அந்த ஒரு நாள் போல அல்ல .

வருஷம் எல்லாம் வசந்தம் போல இருதயம் இடமாறித்துடித்தது டிங்டோங் கோயில்மணி போல , எதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் போல அல்ல யார் இந்த தேவதை என்று நெஞ்சம் துள்ளியது! நேசிப்பில்  மனமோ உன்னருகில் நான் இருந்தால் படம் போல  காலம் எல்லாம் என் பொண்டாட்டி நீ என்று என்றோ எழுதிய தீர்ப்பு போல என்னைக்கொன்றது !

உனக்கு  உண்மை தெரியுமா யாழினி ?நானும் அகதியாக இடம் பெயரமுன் என் தொழில்கள் பல பூர்வபூமியில்.

என்றாலும் நான் மதித்தது வானொலியோடு பயணிக்க யுத்த இடப்பெயர்வில் என் ஆசையைவிட  பொருளாதார கடமை என்னை அழைத்தது. விற்பனைப்பிரதிநிதி வேலைக்கு.!

நெஞ்சம் எல்லாம் பாடல்களும், கவிதையும் கரைகடந்த வெள்ளம் போல பாய்ந்தாலும் .

ஊருவிட்டு ஊருவந்து காதல் கீதம் பண்ணாதீங்க போல பல இடங்கள் பயணித்த போதும் பார்வைகள் பல பார்த்தேன் சுடச்சுட ரசித்தேன், என்று கொல்லவில்லை சிந்தையை .

எங்கேயும் எப்போதும் போல   என் அடிப்படை உயிர் பாதுகாப்பை  கேள்விக்குறியாகிய போதுதான்  சிறையில் சில ராகங்கள் போல நானும் புலம்பெயர்ந்தேன் .


பொருளாதார தேடலுக்காக அல்ல விதியின் விளையாட்டு உன்னைச்சந்திக்க வைத்தது என் வாலிபம் பூத்தது  இப்படி போல


 யாழினி!

தொடரும்.

13 June 2016

கொழுப்பு ஜாஸ்தி [[[ கிறுக்கல்.

கொக்குத்தொடுவாய் கோரைப்புல்லில்
கொக்கி போல கோர்த்த
கொண்டைப்பூ
கொழுந்தன்
கொடுத்துவிட்டேன்
கொஞ்சும் கிளி  போல
கொக்காவில்
கொழுந்தை அவள்
கொழும்புக்கு போகையிலே!


கொடிகாமம் பாதை மூடி!
கொப்பரும் தவித்த
கொலையுகம் எல்லாம்
கொப்பளம் போல
கொத்திக்கிளறுது
கொஸ்கமுவ வெடிவிபத்துப் போல!
கொண்ட காதலில் !.!


.
கொக்கட்டிச்சோலைக் கதை சில
கொல கொல என்று
கொழுந்து, வெற்றில்லையும்
கொழுப்பு பேச்சும் கலந்த காலம்
கொட்டாவ முதல்
கொட்டாஞ் சேனைப்பக்கம்
கொடிபறக்குது குஸ்பூ காலயுகம் போல!
கொலன்னாவையில் கொண்ணர்
கொடுத்த இருட்டடியும்!
கொஞ்சிப்பேச
கொஞ்சக்காலம் தடைகள் என்றாலும்!
கொலஸ்ரோல் என்றும்
கொடா நாட்டு ஓய்வு போல போன
கொழுந்தியா நீயும் !
கொழுத்திப் போட்டாய் காதல்
கொலைஞன்  இவன்  என்று

கொம்பனித்தெரு வீதியில் ! சகியே
கொசு போல
கொல்லுதடி!   நீ இன்னும்
கொடுக்காத காதல்த் தீர்வை தேடி!!கொற்றவையிலும் காணவில்லை,
கொடிபிடித்த ஐநாவிலும் தேடவில்லை,
கொட்டி என்று
கொலைகள் செய்த
கொலைகாரபூமியில்
கொட்டிக்கிடக்குது
கொடுத்த கடிதங்கள்  பிரிக்கப்படாத
கொடுமை சின்னங்களாக
கொடுக்காத நீதி போல

கொப்பகேன்  என்று நீ போனதால்
கொடுத்துவச்சவள்  அவள் என்று
கொண்டாடும் உறவுகள்!
கொட்டியாவத்த முருகன்
கொடிமரம் போல யாசிக்கும்
கொழுந்தன் உயிர் !
கொடி போல வாடுதடி
கொண்ட காதலில்!கொல்லாமை சிறப்புஎன்ற
கொஸ்லாந்த மாஸ்டர் கூட
கொடிபோல மண் சரிவில்
கொலையாகிய கதை என்று
கொடுக்கப்போறேன் மனுவிசாரணை!!கொடுக்கவா இதயம் இடமாற்ற
கொடுத்தால் கிடைக்கும் மறு வாழ்வு.
கொல்லும் உன் நினைவு தாண்டி..
கொழும்பு நோக்கி மீண்டும் நேசக்கரம் நீட்டுது!
கொழுத்தும் வெயிலில் நானும் போறேன்
கொழும்புக்கு விடுமுறையில்!
கொழ்ந்தனாருக்கு கொப்பளிக்க ஒரு
கொப்பிழா[[


கொஞ்சம் கற்பனை!
கொஞ்சம் நிஜம்
கொழும்பு அரசியல் நோக்கி[[[
------------------

இலங்கையின் ஊர்கள் இங்கே முதலாக!
கொப்பர்- தந்தை யாழ்வட்டாரமொழி
கொண்ணர் - அண்ணா-/யாழ் வட்டாரமொழி!
கொட்டி-சிங்களத்தில் புலி !
கொப்பகேன் -ஜரோப்பிய நாட்டுகளின் தலைநகரம் ஒன்று!